"இதுவரை தனியொரு பிரஜையாக என்னால் இயன்றவரைக்கும் செயற்பட்டதைப் போல , இனிவரும் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய அளவிலான வளங்களைக்கொண்டு செயலாற்றி வளம்மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதே எனது கண்களைத்திறந்துகொண்டு நான் காணும் கனவாகும்."

வாருங்கள் ஒன்றாக கண்களைத் திறப்போம் கனவு காணுவோம்.

“ஒரு மாற்றம் ஓயாத முன்னேற்றம்”

மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

எமக்கான ஒரு கீதம்

ஒரு மாற்றம் ஓயாத முன்னேற்றம்

MUSIC: Siva Pathmayan
SINGERS: Shangeerththan | Jeyanthan | Thushyanthan
LYRICS: Varuon Thushyanthan
MIX AND MASTER: Vakeesan Ananth
VISUAL COMPILATION: Rishi Selvam
EDITOR: Dhilip Loganathan

 

யாழ் மாவட்டத்தை குறித்த என் கனவுகள்

பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே,

பவதாரணி இராஜசிங்கம் ஆகிய நான் 2020 பாராளுமன்றத்த்திற்கான யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி பிரதிநியாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்பதை பணிவன்புடன் தங்களுக்கு அறியத்தருகிறேன்.

சிறந்ததோர் சமுதாயம்

வடக்கு சார்ந்த சிறப்பியல்புகளை மீளப் பெற்ற , கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தை உருவாக்குவதற்கான சிறப்பான அரசியல் ரீதியான வளங்களை உள்வாங்கி, திடமான ஒரு சமுதாயத்தின் அடிப்படையை உருவாக்குவதினூடாக, எதிர்காலத்துக்கான தனித்துவம் மிக்க ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல்.

தொழில் வாய்ப்புக்கள்

அனைவருக்குமான தனியாள் இயலுமைகளுக்கேற்ற தொழில்முயற்சிகளை சாத்தியப்படுத்தி அனைவருக்குமான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் உழைப்பினூடாக உயரும் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல்.

விவசாயம்

எமது பூர்வீக வாழ்வாதாரமான விவசாயம் வலுவான சக்தியாக திகழ்வது நமக்கு பலமாகும். விவசாயத்திற்கான அனைத்து வாய்ப்புக்களையும் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்தலினூடாக விவசாயிகளின் கௌரவம் மிக்க வாழ்விற்கு வழிசமைத்து செழிப்பான வஇவசாய சமுகம் என்ற நிலைக்கு மீளத் திரும்புவதற்காக பாடுபடுதல்.

சிறுவர்

சிறுவர் உரிமைகள், சிறுவர் கல்வி என்பவைகள் அடுத்த தலைமுறைக்கான ஆழமான ஆரம்பமாகும். அந்தவகையில் சிறுவர்களின் இக்கால ,எதிர்கால முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அனைத்துவகையான திட்டங்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து எதிர்கால யாழ்ப்பாணத்துக்கான திடமான அடித்தளமொன்றைக் கட்டியெழுப்புதல்.

அடிப்படைத்தேவைகள்

தனி நபர் மற்றும் குடும்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டிய தேவைகள் தொடர்பாக, ஒவ்வொரு பிரஜைக்குமான அடிப்படைத் தேவைகளான உணவு , உடை ,  கழிவறை வசதியடன் கூடிய வீடு மற்றும் சுகாதார  வசதிகளை ஏற்படுத்துவதற்கான தேசிய இறைமையை மக்களுக்காக பெற்றுக் கொடுக்க உழைத்தல்.

இளைஞர் மற்றும் பெண்கள் வலுவூட்டல்

அடுத்த தலைமுறையின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளான இளைஞர்கள் மற்றும் பெண்களின் மனநிலையே ஒரு சமூகத்தின் எதிர்காலமாகும்; என்பதை கருத்தில் கொண்டு அவர்களுடைய வாழ்வாதார தேவைகளைத் திட்டங்களாக்கி சாத்தியப்படுத்துவதனூடாகவளம்மிக்க வலுவான இளைஞர் மற்றும் பெண்கள் சமுதாயத்தோடு இணைந்து செயற்படுதல்.

தொழிநுட்பம்

உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடுவதற்குத் தேவையான சக்திகளில் தொழிநுட்ப ரீதியான இற்றைப்படுத்தல் அவசியமாகிறது. தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் அவற்றைச் செயற்படுத்துவதற்கான  செயற்திட்டங்களையும் நம் மக்களை நோக்கித் திருப்புவதற்கான குரலாக ஒலிப்பதனூடாக தொழிநுட்பத்துறையில் முன்னுதாரணமான யாழ்ப்பாணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தல்.

கல்வி

இழக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கல்வி நிலையை மீளப் பெறுவதற்கான விழிப்புணர்ச்சியுடன் கூடிய சேவைகளூடாக, குறிப்பாக ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான அரச மற்றும் தனியார் வாய்ப்புக்களை வடக்கில் பொதுமைப்படுத்தி சிறந்த கல்விமான்களை அதிகளவில் கொண்ட சமுதாயமாக வடக்கினை மீளக் கட்டியெழுப்புவதற்காக உழைத்தல்.

முதியோர்

வடக்கின் மூத்த பிரஜைகளின் அபிலாஷைகளை அறிந்து அவற்றைப் பெற்றுக்கொடுத்தலினூடாக அவர்களது ஆசீர்வாதங்களையும் வழிகாட்டல்களையும் பெற்று வெற்றிகரமான ஒழுக்கம் மிக்க சமுதாயத்தைக் காணலாம்; என்பதனை உணர்ந்து முதியோர் வாழ்வாதாரத்தை செழிப்பும் வளமும் மிகுந்ததொன்றாக்குவதற்காக உழைத்தல்.

கலை, கலாச்சாரம்

வடக்கிற்கான கலை மற்றும் கலாச்சாரம் தனித்துவம் மிக்கதாகும். கடந்த யுத்த அனர்த்தங்களினூடாக சிதைந்திருக்கும் நமது கலை வளங்களை மீளக் கட்டியெழுப்பி பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலைகளையும் கலைஞர்களையும் வெளியுலகம் பார்த்து வியக்கும் நிலைக்கு மீளக் கொண்டுவருவதற்கான திட்டங்களை உருவாக்கி சாத்தியப்படுத்த உழைத்தல். வடக்கின் கலைஞர்களுக்கான பாதைகளை தேசிய அளவிலான நீரோட்டத்தில் கலப்பதற்கான காரணியாக செயற்படுவதினூடு நம் கலாச்சாரத்தை மீள வளப்படுத்த செயற்படுதல்.